CHAMPIONS! 🏆
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரின் (B Division – Tier 1) இறுதிப்போட்டியில் Amal International School ஐ 62 : 49 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி Champions ஆக மகுடம் சூடியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி.
இத்தொடரில் பங்குபற்றிய யாழ் இந்துவின் 20 வயதுப்பிரிவு கூடைப்பந்தாட்ட அணி காலிறுதி ஆட்டத்தில் சென் ஜோசப் கல்லூரி (Grandpass) வெற்றிபெற்று அரையிறுதி ஆட்டத்தில் காலி St.Aloysiyus’ கல்லூரியை வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இதே தொடரில் நாலந்தா கல்லூரியை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று யாழ் இந்துவின் கூடைப்பந்தாட்ட அணி Champion ஆகி வரலாற்று தடத்தை பதித்திருந்தது. மீண்டும் 8 வருடங்களுக்கு பின்னர் வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்தி வரலாற்றுத்தடத்தை பதித்திருக்கிறது.
இந்த சாதனை வெற்றிக்கும், யாழ் இந்துவின் கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கும் பக்கபலமாகவும் வழிகாட்டியாகவும் திகழும் கல்லூரி அதிபர், கல்லூரி நிர்வாகம், பழைய மாணவர்கள், கொழும்பு பழையமாணவர் சங்கம் மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும்
தனிப்பெருங் கலையகம் வாழ்க!💙🤍

